/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
/
சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
ADDED : செப் 10, 2024 07:58 PM

ஊட்டி:சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி கக்கன்ஜி நகரை சேர்ந்தவர் ராஜபாண்டி, 31. நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள லாட்ஜில் பணிபுரிந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், லாட்ஜ் அருகே 17 வயது சிறுமிடம் நெருங்கிப் பழகினார்.
கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி திருமணம் செய்து கொள்வதாக கூறி, சிறுமியை கோவை அழைத்துச் சென்றார். அங்கு நண்பர் வீட்டில் தங்க வைத்து தினமும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர், கோத்தகிரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். சிறுமியை போலீசார் தேடுவதை அறிந்த ராஜபாண்டி, சிறுமியை மீண்டும் கோத்தகிரிக்கு கொண்டு வந்து விட்டுச் சென்றார்.
அவரை மீட்ட கோத்தகிரி போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜபாண்டியை கைது செய்தனர்.
இந்த வழக்கு, ஊட்டி மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிந்த நிலையில், ராஜபாண்டிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி லிங்கம் தீர்ப்பளித்தார்.