/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோத்தகிரி நெடுகுளாவில் கோவில் கும்பாபிஷேகம்
/
கோத்தகிரி நெடுகுளாவில் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஆக 20, 2024 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி;கோத்தகிரி கோடநாடு சாலையில் மலைமேல் எழுந்தருளியுள்ள நெடுகுளா ஜடையசுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று சிறப்பாக நடந்தது.
நுாற்றாண்டு பழமை வாய்ந்த இக்கோவிலில், கடந்த சில மாதங்களாக கிராம மக்களால் புனரமைப்பு பணி நடந்தது. பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், நேற்று காலை கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, ஐயனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஊர் தலைவர் மணியகார பெள்ளாகவுடர் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் திரளான கிராம மக்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, பஜனை, ஆன்மிக சொற்பொழிவு மற்றும் ஆடல் பாடல் அரங்கேற்றப்பட்டது. காலை, 11:00 மணி முதல், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

