/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தற்காலிக பாலம்
/
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தற்காலிக பாலம்
ADDED : மே 21, 2024 12:09 AM

பந்தலுார்:பந்தலுாரில் தொடரும் மழையால், பாலம் அடித்து செல்லப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பந்தலுார் அருகே, கொளப்பள்ளி, கடலைகொல்லி, மாங்கம்வயல், அம்மன்காவு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, பாட்டவயல், பிதர்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு, பாலாவயல் வழியாக செல்லும் சாலை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதில், பாலாவயல் பகுதியில், சாலையின் குறுக்கே பாயும் ஆற்றை கடக்க கட்டப்பட்டிருந்த பாலம், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால், அந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில், தற்போது நபார்டு திட்டத்தின் கீழ், 3- கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் கட்டும் பணி துவக்கி பணிகள் நடந்து வருகிறது.
இதனால், புதிய பாலத்தை ஒட்டி, வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் ஆற்றை கடந்து செல்ல மண்ணால் ஆன தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு இருந்தது.
இதன் அடிப்பகுதியில் ஆற்று வெள்ளம் செல்ல ஏதுவாக சிறிய வடிகால் போடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பந்தலுார் பகுதியில் கன மழை பெய்ததால், ஆற்றில் வெள்ளம் அதிகரித்து தற்காலிக பாலத்தின் மண் அரித்து செல்லப்பட்டது. இதனால், மண் அரிப்பு ஏற்பட்ட தற்காலிக பாலம் அடித்து செல்லப்பட்டது.
பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பல இடங்களுக்கு வாகனங்கள் செல்ல முடியவில்லை.
அதிகாரிகள் கூறுகையில், ' இப்பகுதியின் போக்குவரத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

