/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தந்தி மாரியம்மன் கோவில் திருவிழா துவக்கம்: துர்கா பரமேஸ்வரி நடனத்தில் பரவசம்

ADDED : ஏப் 08, 2024 12:21 AM

குன்னுார்;குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலில், சித்திரை திருவிழா ஆண்டுதோறும் ஒரு மாதம் நடக்கிறது.
நடப்பாண்டுக்கான திருவிழா கர்நாடக சனாதன சாகித்திய சங்கம் சார்பில் கடந்த, 5ம் தேதி துவங்கியது. ஆழ்வார்பேட்டை கோதண்டராமர் கோவிலில் இருந்து பால் குடம் மற்றும் அபிஷேக பொருட்கள் ஊர்வலம். அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை, காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
கர்நாடக மாநிலம் சிக்மகளூர் நடன குழுவினரின் துர்கா பரமேஸ்வரி நடனம் தத்ரூபமாக நடத்தப்பட்டது. தாரை தப்பட்டைகள் முழங்க பக்தர்கள் நடனமாடி ஊர்வலத்தில் பங்கேற்றனர்,
தொடர்ந்து கொடியேற்றம், திருப்பூச்சாற்று, கரக ஊர்வலம் நடந்தது. காந்தி புரம், இந்திரா நகரில் இருந்து அரவை காவடி ஊர்வலத்துடன் அம்மன் பவனி நடந்தது.