/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேற்றில் சிக்கிய காட்டெருமை ஒரு மணி நேரம் போராடி மீட்பு
/
சேற்றில் சிக்கிய காட்டெருமை ஒரு மணி நேரம் போராடி மீட்பு
சேற்றில் சிக்கிய காட்டெருமை ஒரு மணி நேரம் போராடி மீட்பு
சேற்றில் சிக்கிய காட்டெருமை ஒரு மணி நேரம் போராடி மீட்பு
ADDED : ஆக 20, 2024 10:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார் : குன்னுாரில் சேற்றில் சிக்கிய காட்டெருமையை வனத்துறையினர் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர்.
குன்னுார் உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட ஏ.வி.டி., தேயிலை தோட்டத்தில் காட்டெருமை சேற்றில் சிக்கி இருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனவர் ராஜ்குமார் உட்பட, 10க்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள், மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
சேற்றில் சிக்கிய காட்டெருமையின் கொம்பில் கயிற்றை கட்டி, ஒரு மணி நேரம் போராடி வெளியே இழுத்து மீட்டனர். காட்டெருமைக்கு சிகிச்சை அளித்து வனப்பகுதிக்குள் விட முடிவு செய்துள்ளனர்.