/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குண்டும், குழியுமான தொட்டபெட்டா சாலை சுற்றுலா வாகன ஓட்டிகள் அவதி
/
குண்டும், குழியுமான தொட்டபெட்டா சாலை சுற்றுலா வாகன ஓட்டிகள் அவதி
குண்டும், குழியுமான தொட்டபெட்டா சாலை சுற்றுலா வாகன ஓட்டிகள் அவதி
குண்டும், குழியுமான தொட்டபெட்டா சாலை சுற்றுலா வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜூலை 05, 2024 01:42 AM
ஊட்டி;நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டு தோறும் சராசரியாக, 35 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா சிகரத்தின் இயற்கை காட்சியை ரசிக்க செல்கின்றனர்.
கேரளா, கர்நாடக மற்றும் மாநிலத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்து செல்கின்றனர். வாகன நெரிசலை கட்டுப்படுத்த சமீபத்தில் 'பாஸ்ட் டேக்' அமைக்கப்பட்டது. தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கிறது. வார நாட்கள், அரசு விடுமுறை உள்ளிட்ட பிற நாட்களில் அதிகளவில் சுற்றுலா வாகனங்கள் வருகிறது.
தொட்டபெட்டா சந்திப்பிலிருந்து தொட்டபெட்டா காட்சி முனைக்கு, 3 கி. மீ., துாரம் உள்ளது. இச்சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
சாலை சீரமைத்து பல ஆண்டுகள் ஆனதால் ஆங்காங்கே குண்டும் குழியுமாக பெயர்ந்து காணப்படுகிறது. இச்சாலையில், பயணிக்கும் சுற்றுலா வாகனங்கள் மிகுந்த சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா கழகத்திடம் சாலையை சீரமைக்க கோரி புகார் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலா கழக அதிகாரிகள் கூறுகையில், 'தொட்டபெட்டா சந்திப்பிலிருந்து காட்சி முனைக்கு வரும் சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சாலையின் நிலை குறித்து வனத்துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி வந்ததும் சாலை சீரமைக்கப்படும்,' என்றனர்.