ADDED : ஏப் 18, 2024 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார் : குன்னுார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பா.ஜ., வேட்பாளர் முருகன் பேசுகையில்,''கடந்த,10 ஆண்டுகளாக சிறந்த ஆட்சியை மோடி கொடுத்து வருகிறார்.
ஏழை, எளிய மக்கள், விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி சிறந்த நிர்வாகத்தை நடத்தி வருகிறார். நான் வெற்றி பெற்றால், இங்கு பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்வதுடன், மார்க்கெட் வியாபாரிகளின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும், வெலிங்டன் பகுதி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்,'' என்றார்.

