/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கர்நாடக பூங்காவில் வசீகரிக்கும் வண்ண மீன்கள்: சுற்றுலா பயணிகள் குதுாகலம்

ADDED : ஏப் 26, 2024 01:54 AM

ஊட்டி;கர்நாடக அரசின் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பூங்காவில் கோடை சீசனை ஒட்டி வண்ண மலர்கள் பூத்து குலுங்குகிறது.
ஊட்டியில் கோடை சீசன் துவங்க உள்ள நிலையில், முன்னதாகவே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஊட்டி பர்ன்ஹில் பகுதியில் கர்நாடக மாநில அரசுக்கு சொந்தமான பூங்கா உள்ளது. அங்கு சீசனை ஒட்டி தயார் செய்த பல வண்ண மலர்கள் பூத்துள்ளது.
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஆர்கிட், கைக்ளோமன், ரெனன் குலஸ், டியூபெரஸ், பிகோனியா, கிரைசாந்திமம், மேரிகோல்டு உள்ளிட்ட, 200 ரகங்களில் ஐந்து லட்சம் மலர்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது,
பசுமை குடிவில், 25 ஆயிரம் பூந்தொட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. பூங்காவில் அமைக்கப்பட்ட தொங்குபாலம், மையப்பகுதியில் அமைந்துள்ள மலர் நீர்வீழ்ச்சி மற்றும் புதிதாக பூங்கா வளாகத்தில் குளம் அமைத்து காட்சிப்படுத்திய வண்ண மீன்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.
பூங்கா நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், 'நடப்பாண்டு கோடை சீசனுக்காக பூங்கா தயார் செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலான இடங்களில் வண்ண மலர்கள் பூத்து குலுங்குகிறது. சுற்றுலா பயணிகள் கணிசமாக அதிகரித்துள்ளது,' என்றனர்.