/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட யானை காட்டாற்றில் 300 மீட்டர் போராடி தப்பியது

ADDED : ஜூன் 29, 2024 02:35 AM

கூடலுார்:நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. நான்கு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் அவ்வப்போது மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.
கூடலுாரில் உற்பத்தியாகி, கேரளா செல்லும் பாண்டியார் - புன்னம்புழா மற்றும் அதன் கிளை ஆறுகள், நீரோடைகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஓவேலி தர்மபுரி பகுதி வழியாக செல்லும் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
நேற்று முன்தினம் காலை, அந்த ஆற்றை நான்கு காட்டு யானைகள் கடந்து செல்ல முயன்றுள்ளன.
அதில், ஒரு பெண் யானை நிலைத்தடுமாறி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. உயிருக்கு போராடி தத்தளித்த அந்த யானை, 300 மீட்டர் துாரம் வரை அடித்துச் செல்லப்பட்டு, போராடி நீந்தி, ஆற்றின் கரை ஏறி உயிர் தப்பியது.
இதை, அப்பகுதி இளைஞர்கள் எடுத்த 'வீடியோ', நேற்று வெளியாகி பரவியது.
மழை தொடர்வதால், வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.