ADDED : மே 03, 2024 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்;குன்னுார் பகுதியை சேர்ந்தவர் ரீனா. இவர் நேற்று முன்தினம் இரவு கேரள மாநிலம் வயநாடு பகுதிக்கு சென்று விட்டு, குடும்பத்தினருடன் காரில் வந்துகொண்டிருந்தார்.
அப்போது நெலாக்கோட்டை அருகே இரவு. 7: 45 மணிக்கு சாலையில் நின்றிருந்த யானை, காரை வழிமறித்து உள்ளது.
மேலும், காரின் முன்பக்கத்தை தாக்கிய நிலையில், யானையிடம் இருந்து தப்புவதற்காக காரை பின்னோக்கி எடுத்துள்ளார்.
அதில் கார் சேதமடைந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து யானையை சாலையோர புதருக்குள் துரத்தி உள்ளனர். மேலும் நேற்று பகல் அதே பகுதியில் மீண்டும் யானை முகமிட்டது.
வனத்துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.