/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மழை வெள்ளம் சூழ்ந்த மைதானம் கால்பந்து விளையாடிய வீரர்கள்
/
மழை வெள்ளம் சூழ்ந்த மைதானம் கால்பந்து விளையாடிய வீரர்கள்
மழை வெள்ளம் சூழ்ந்த மைதானம் கால்பந்து விளையாடிய வீரர்கள்
மழை வெள்ளம் சூழ்ந்த மைதானம் கால்பந்து விளையாடிய வீரர்கள்
ADDED : ஜூலை 01, 2024 02:09 AM

கூடலுார்;கூடலுார் பாடந்துறையில் மழை வெள்ளம் சூழ்ந்த மைதானத்தில் இளைஞர்கள் பலர் 'வாட்டர்' கால்பந்து விளையாடி மகிழ்ந்தனர்.
கூடலுார் பகுதியில் பலத்த மழை பெய்தது. மழை வெள்ளம் விவசாய தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்ததால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
அதில், கூடலுார் பாடந்துறை வழியாக செல்லும் ஆற்றில் ஏற்பட்ட மழை வெள்ளம், குடியிருப்பு மற்றும் விவசாய தோட்டங்கள் மட்டுமின்றி, கம்பாடி சாலையை ஒட்டிய கால்பந்து மைதானத்திலும் சூழ்ந்தது.
இதனை பார்த்து ஆர்வம் அடைந்த கால்பந்து வீரர்கள், மைதானத்தில் இறங்கி 'வாட்டர்' கால்பந்து விளையாடினர்.
வீரர்கள், மழை வெள்ளத்தில் விழுந்து, எழுந்து உற்சாகமாக கால்பந்து விளையாடியது மக்களை வெகுவாக கவர்ந்தது. அவர்கள் ஆர்வத்தை மக்கள் பாராட்டி சென்றனர்.
கால்பந்து ரசிகர்கள் கூறுகையில், 'நம் நாட்டில், கிரிக்கெட் விளையாட்டுக்கு இருக்கும், முக்கியத்துவம் கால்பந்துக்கு இல்லை. எனினும், இப்பகுதியினர் கால்பந்து, கைப்பந்து போட்டிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இங்கு கால்பந்து பயிற்சி மையம் அமைத்தால், பல சிறந்த கால்பந்து வீரர்கள் உருவாக வாய்ப்புள்ளது,' என்றனர்.