/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீட்டின் சுவரில் விஷ குளவி கூடு தீயிட்டு அழித்த தீயணைப்பு துறை
/
வீட்டின் சுவரில் விஷ குளவி கூடு தீயிட்டு அழித்த தீயணைப்பு துறை
வீட்டின் சுவரில் விஷ குளவி கூடு தீயிட்டு அழித்த தீயணைப்பு துறை
வீட்டின் சுவரில் விஷ குளவி கூடு தீயிட்டு அழித்த தீயணைப்பு துறை
ADDED : மே 31, 2024 11:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்;கூடலுார் அருகே, வீட்டின் சுவற்றில் கட்டப்பட்டிருந்த விஷ குளவி கூட்டை தீயணைப்பு துறையினர் தீயிட்டு அழித்தனர்.
கூடலுார், கோழிக்கோடு சாலை எம்.ஜி.ஆர்., நகர் சேர்ந்தவர் சுந்தர். இவர் வீட்டின் சுவற்றில், விஷ குளவி கூடு கட்டி இருந்தது. குளவி கொட்டினால் ஆபத்து என்பதால், அப்பகுதிக்கு யாரும் செல்லவில்லை. கூடலுார் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து, நேற்று முன்தினம், இரவு பகுதிக்கு சென்ற தீயணைப்பு துறையினர், தீப்பந்தம் மூலம் விஷ குளவி கூட்டை அழித்தனர். வீட்டில் இருந்தவர்கள் நிம்மதி அடைந்தனர்.