/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வனப்பகுதி காட்சி முனைக்கு செல்ல தடை ;அறிவிப்பு பலகை வைத்த வனத்துறை
/
வனப்பகுதி காட்சி முனைக்கு செல்ல தடை ;அறிவிப்பு பலகை வைத்த வனத்துறை
வனப்பகுதி காட்சி முனைக்கு செல்ல தடை ;அறிவிப்பு பலகை வைத்த வனத்துறை
வனப்பகுதி காட்சி முனைக்கு செல்ல தடை ;அறிவிப்பு பலகை வைத்த வனத்துறை
ADDED : மே 28, 2024 12:16 AM

பந்தலுார்:பந்தலுார் அருகே உள்ள வனப்பகுதி காட்சிமுனைக்கு செல்ல வனத்துறை தடைவிதித்துள்ளது.
பந்தலுார் அருகே தேவாலா ஹட்டி பகுதியில் இருந்து, டான்டீ வழியாக நாடுகாணி மற்றும் கூடலுார் செல்லும் சாலை அமைந்துள்ளது. மேட்டுபாங்கான பகுதியை கடந்து செல்லும் சாலையின் இரண்டு பக்கங்களிலும் அழகிய தேயிலை தோட்டம் மற்றும் நாடுகாணி, ஜீன்பூல், ஓவேலி மற்றும் கேரளா மாநிலம் வழிக்கடவு மற்றும் தேவர் சோலை வனப்பகுதி உள்ளதால், இவற்றை பயணிகள் ரசித்து செல்கின்றனர்.
இதனால், இந்த பகுதிக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் மற்றும் திருமண ஆல்பம் எடுக்க வரும் 'வீடியோகிராபர்கள்' அதிகளவில் வந்து செல்கின்றனர். மேலும், தேயிலை தோட்டத்தை ஒட்டிய வனப்பகுதி புல்வெளி அழகிய காட்சி முனையாக உள்ளதுடன், யானைகள், சிறுத்தை வாழ்விடமாகவும் உள்ளது. இப்பகுதியில் சமீபகாலமாக பல்வேறு சூழல் பாதிப்புகள் ஏற்படும் நிலை உருவானது. இதனை தொடர்ந்து, 'இந்த பகுதி வனவிலங்குகள் வாழ்விடமாக உள்ளதால், யாரும் இங்கு செல்லக்கூடாது; மீறி சென்றால் வன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,' என, வனத்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மேலும், இந்த பாதையில் கற்கள் நட்டு தடை ஏற்படுத்தியுள்ளதுடன், கண்காணிப்பிலும் வனக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில்,' இப்பகுதிக்கு வரும் பயணிகள் உட்பட பிற மக்களால் வனச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனைமீறி உள்ளே செல்பவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.