/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடியிருப்புகளை ஒட்டி யானைகள் முகாம் கண்காணித்து வரும் வனத்துறையினர்

ADDED : ஜூலை 02, 2024 12:42 AM

பந்தலுார்:பந்தலுார் நெல்லியாளம் டான்டீ குடியிருப்புகளை ஒட்டி யானைகள் முகாமிட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பந்தலுார் சுற்றுவட்டார பகுதி குடியிருப்புகளை ஒட்டி தற்போது அதிகளவில் யானைகள் முகாமிட துவங்கி உள்ளன. அதில், நெல்லியாளம் டான்டீ மற்றும் பெருங்கரை குடியிருப்புகளை ஒட்டிய புல்வெளியில் இரண்டு குட்டிகளுடன், 4- யானைகள் முகாமிட்டுள்ளது.
குடியிருப்புகள் மற்றும் தொழிலாளர்கள் வேலை செய்யும் பகுதியை ஒட்டி, யானைகள் முகாமிட்டு இருப்பதால் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். பெருங்கரை பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு வந்த யானைகள், சோமன் என்பவரது வீட்டை சேதப்படுத்தியது.
டான்டீ மக்கள் கூறுகையில், 'இதுவரை இந்த பகுதிக்கு யானைகள் வந்ததில்லை. முதல் முறையாக இப்பகுதிக்கு யானைகள் வந்துள்ளதால் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி கல்லுாரி செல்லும் மாணவர்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே, இந்த யானைகளை அடர் வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர். தொடர்ந்து, பிதர்காடு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.