/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டெருமை வேட்டை விவகாரம் வனத்துறை தீவிர சோதனை
/
காட்டெருமை வேட்டை விவகாரம் வனத்துறை தீவிர சோதனை
ADDED : ஏப் 27, 2024 01:46 AM
கூடலுார்:நீலகிரி மாவட்டம், கூடலுாரை ஒட்டிய சில்வர் கிளவுட் பகுதி அருகே, அ.தி.மு.க., மாநில வர்த்தக அணி தலைவர் சஜீவனுக்கு சொந்தமான இடத்தில், காட்டெருமை வேட்டையாடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, எஸ்டேட்டில் வேலை செய்யும் பைசல், 46, ஷாபுஜாக்கப், 48, ஆகியோரை வனத்துறையினர் கைது செய்து, எஸ்டேட் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். வேட்டைக்கு பயன்படுத்திய இரண்டு நாட்டு துப்பாக்கிகள், 13 தோட்டாக்கள், கத்தி, கோடாரி, டார்ச் லைட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். எஸ்டேட் கணக்காளர் பரமசிவம் என்பவரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து, இடத்தின் உரிமையாளரான அ.தி.மு.க., மாநில வர்த்தக அணி தலைவர் சஜீவன் மற்றும் சுபைர், ஸ்ரீகுமார் ஆகியோரை குற்றவாளிகளாக சேர்த்துள்ளனர். தலைமறைவான மூவரை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, இவ்வழக்கில் தொடர்புடைய ஆறு குற்றவாளிகளின் வீடுகளிலும், வனத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதில், ஸ்ரீகுமார் வீட்டிலிருந்து, 50க்கும் மேற்பட்ட கத்திகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து சோதனை நடக்கிறது.

