/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கரடியை பிடிக்க கூண்டு வைத்த வனத்துறை
/
கரடியை பிடிக்க கூண்டு வைத்த வனத்துறை
ADDED : மே 21, 2024 12:16 AM

குன்னுார்:குன்னுாரில், 8 நாட்களாக உலா வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குன்னுார் அருகே வனத்தில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு உணவு, தண்ணீரை தேடி வன விலங்குகள் வந்து செல்கின்றன. கடந்த, 13ம் தேதி தடம் மாறி வந்த ஒற்றை குட்டி கரடி டென்ட் ஹில், குன்னுார் பஸ் ஸ்டாண்ட், தீயணைப்பு துறை, ராஜாஜி நகர், பி.எஸ்.என்.எல்., குடியிருப்பு பெட்போர்டு பகுதிகளில் உலா வந்தது. இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்ல அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் குன்னுார் ரேஞ்சர் ரவீந்திரநாத் தலைமையில், தேனடை, விளக்கெண்ணெய், வெல்லம் வைத்த கூண்டு, கிளப் ரோடு அருகே வைக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.

