/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மரக்கிளையில் சிக்கிய ராஜநாகம் மீட்ட வனத்துறையினர்
/
மரக்கிளையில் சிக்கிய ராஜநாகம் மீட்ட வனத்துறையினர்
ADDED : ஆக 12, 2024 02:21 AM

குன்னுார்;குன்னுார் அருகே, மரக் கிளையில் சிக்கிய ராஜநாகம் வனத்துறையால் மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
குன்னுார் பர்லியார் அருகே பென்ஹோப் தோட்ட பகுதியில் பாம்பு ஒன்று சிறிய மரத்தின் கிளையின் நடுவே சிக்கி இருப்பதாக, தோட்ட பணியாளர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதன்பேரில், குன்னுார் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில், வனவர் ராஜ்குமார், வனக்காப்பாளர் சுப்ரமணி உட்பட வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்த போது, மரத்தில் சிக்கியிருந்தது ராஜநாகம் என்பது தெரிய வந்தது.
உடனடியாக அதனை பாதுகாப்பாக பிடித்து அருகிலுள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.
வனத்துறையினர் கூறுகையில்,'குன்னுாரில் மித வெப்பம் கொண்ட பகுதியாக உள்ள பர்லியார், காட்டேரி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில், 'கிங் கோப்ரா' என்று அழைக்கப்படும் ராஜநாகம் அதிகளவில் உள்ளது.
தற்போது, பர்லியார் பென்ஹோப் பகுதியில் மரக்கிளை இடையே சிக்கிய இந்த, 10 அடி நீளம் கொண்ட ராஜநாகத்தை பாதுகாப்புடன் பிடித்து வனத்தில் விடுவித்தோம். இது போன்ற அரிய பாம்புகள் வந்தால் மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,' என்றனர்.

