/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொட்டியில் விழுந்த கன்று மீட்ட வனத்துறையினர்
/
தொட்டியில் விழுந்த கன்று மீட்ட வனத்துறையினர்
ADDED : ஜூலை 22, 2024 10:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்;குன்னுார் கரன்சி பகுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்த காட்டெருமை கன்று குட்டியை வனத்துறையினர் மீட்டனர்.
குன்னுார் கரன்சி தேயிலை தோட்டம் பகுதியில் உள்ள கழிவுநீர் தொட்டி ஒன்றில் காட்டெருமை கன்று குட்டி தவறி விழுந்தது.
தகவலின் பேரில், குன்னுார் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் அங்கு சென்று தொட்டியில் இருந்த கன்றை ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின் மீட்டனர். தொடர்ந்து, காட்டெருமை கன்று குட்டி வனத்தில் விடுவிக்கப்பட்டது.