/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புல்வெளியில் குட்டி யானைகளின் சேட்டை; கண்டு ரசித்து வியந்த உள்ளூர் மக்கள்

ADDED : செப் 04, 2024 11:12 PM

பந்தலுார் : பந்தலுாரில் முகாமிட்ட யானை கூட்டத்தில் இருந்த குட்டிகளின் சேட்டை பார்வையாளர்களை வியப்படைய செய்தது.
பந்தலுார் மற்றும் கூடலுார் சுற்றுவட்டார பகுதிகளில், சமீப காலமாக யானைகளின் பிரச்னை அதிகரித்து வருகிறது. வனப்பகுதிகளில் மட்டுமே முகாமிட்டிருந்த யானைகள், தற்போது குடியிருப்பு பகுதிகள், விவசாய தோட்டங்கள், நகரப்பகுதிகளில் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வருவதுடன் பொது மக்களையும் அச்சுறுத்தி வருகிறது. எனினும், யானை கூட்டங்களை பார்த்தால், தொல்லைகளை மறந்து அவற்றை ரசிப்பதற்கு யாரும் தவறுவதில்லை.
இந்நிலையில், பந்தலுார் அருகே சேரம்பாடி டான்டீ கோட்ட மேலாளர் அலுவலகம் எதிரே புல்வெளியில் யானை கூட்டம் முகாமிட்டு இருந்தது. அதில், மூன்று குட்டிகள், 'ஒரு யானைகள் மீது ஏறி விளையாடுவது, முட்டித்தள்ளுவது, பின்னர் ஓடிப்போய் தங்கள் தாயாரின் அரவணைப்பில் மறைந்து கொள்வது,' என, சுட்டித்தனத்துடன் சேட்டைகளில் ஈடுபட்டன. இதனை கண்ட அப்பகுதி மக்கள் துாரமாக நின்று ரசித்து 'போட்டோ' எடுத்து சென்றனர்.