/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிணற்றில் தவறி விழுந்த மீன் கொத்தி பறவையின் குஞ்சுகள்: உயிருடன் மீட்ட வேட்டை தடுப்பு காவலர்கள்

ADDED : ஏப் 30, 2024 01:35 AM

கூடலுார்:முதுமலை, தெப்பக்காடு அருகே பறக்க முயற்சித்து, கிணற்றில் விழுந்த மூன்று மீன் கொத்தி பறவையின் குஞ்சுகளை, வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து செயல்பட்டு உயிருடன் மீட்டனர்.
முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு பகுதியில், நேற்று முன்தினம் மர கூட்டிலிருந்து வெளியேறிய மூன்று மீன்கொத்தி பறவையின் குஞ்சுகள், அங்கும், மிங்கும் பறந்த நிலையில், திடீரென அங்குள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடின.
இதனைப் பார்த்த வேட்டை தடுப்பு காவலர்கள், சிறிதும் தமதிக்காமல் கிணற்றில் இறங்கி அவைகளை பாதுகாப்பாக உயிருடன் மீட்டனர்.
வனப்பகுதியில் அவைகள் பறந்து சென்றன. மீன் கொத்தி பறவை குஞ்சுகளை காப்பாற்றிய வன ஊழியர்களுக்கு வன உயிரின ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.