/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீடு இடிந்து ஆண்டுகள் கடந்தும் தீர்வு இல்லை; பாதுகாப்பற்ற குடிசையில் வாழும் பழங்குடியினர்

ADDED : ஏப் 27, 2024 01:32 AM

பந்தலுார்:பந்தலுார் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட, பகுதியில் பந்தகாப்பு பழங்குடியின கிராமம் அமைந்துள்ளது.
இங்கு, 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர். இவர்களில், ஒரு சிலரின் குடிசை, 2004--05 மற்றும் 2019--20 ஆகிய நிதியாண்டில் தொகுப்பு வீடுகளாக கட்டி தரப்பட்டன. அதில், 2004--05ம்நிதியாண்டில் கட்டப்பட்ட வீடுகள் இடிந்து விட்டன.
இவர்களுக்கு புதிய தொகுப்பு வீடுகள் கட்டிதராத நிலையில், 'பிளாஸ்டிக்' காகித குடிசைகளில் வசித்து வருகின்றனர்.
மேலும், சிலருக்கு தொகுப்பு வீடுகள் கிடைக்காததால், பல தலைமுறைகளாக குடிசைகளில் சிரமப்பட்டு வாழும் அவலம் தொடர்கிறது.
இவர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித்தர கோரி, பழங்குடியின மக்கள் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் தீர்வு கிடைக்கவில்லை. இங்கு வனவிலங்குகள் வந்து செல்லும் நிலையில் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் இதுபோன்ற கிராமங்களை நேரில் ஆய்வு செய்து, மண்ணின் மைந்தர்கள் நிம்மதியாக வாழ தொகுப்பு வீடுகளை கட்டி தர வேண்டும்.