/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'மனித மூளை ஒரு அற்புதமான சூப்பர் கம்ப்யூட்டர்' ; திறன் வளர்த்தல் கருத்தரங்கில் தகவல்
/
'மனித மூளை ஒரு அற்புதமான சூப்பர் கம்ப்யூட்டர்' ; திறன் வளர்த்தல் கருத்தரங்கில் தகவல்
'மனித மூளை ஒரு அற்புதமான சூப்பர் கம்ப்யூட்டர்' ; திறன் வளர்த்தல் கருத்தரங்கில் தகவல்
'மனித மூளை ஒரு அற்புதமான சூப்பர் கம்ப்யூட்டர்' ; திறன் வளர்த்தல் கருத்தரங்கில் தகவல்
ADDED : பிப் 23, 2025 11:47 PM

கோத்தகிரி; கோத்தகிரி கட்டபெட்டு அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் கரன்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், திறன் வளர்த்தல் கருத்தரங்கு மற்றும் பயிற்சி முகாம் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் காமன் மற்றும் பிர்ஜின் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஆசிரியர் ராஜூ பங்கேற்று பேசியதாவது:
மனித மூளை ஒரு அற்புதமான கம்ப்யூட்டர். பெரும்பாலானோர் மூளையின் ஒரு சிறு பகுதியை மட்டுமே பயன்படுத்துகிறோம்.
மனித மூளையில், ஒரு கோடி செல்கள், 10 ஆயிரம் கோடி நியூரான்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு நியூரானும், ஆயிரம் முதல் பத்தாயிரம் நியூரான்களுடன் தொடர்பில் உள்ளது. அவற்றின் வழியாக மின்சாரம் பாய்வதுடன், அங்கு செயல்படும் வேதி பொருட்கள்தான் நமது உணர்வுகளை நிர்ணயிக்கிறது.
அறிவியல் பூர்வமாக மூளையை பயன்படுத்தும் முறைகளை அறிந்து கொண்டால், நாம் சிறந்த அறிவாளிகளாக மாறலாம். உதாரணத்திற்கு, 15க்கும் மேற்பட்ட வார்த்தைகளை நினைவில் வைத்து, அவற்றை ஒரு கதை மூலம் இணைத்து கொண்டால், இரண்டு வினாடிகளில் அவற்றை மனப்பாடம் செய்யலாம்.
அதுபோல பெரிய சொற்றொடர்களை அவற்றின், முதல் எழுத்தின் மூலம் ஒரு சிறு வார்த்தையாக்கி எளிதாக மனதில் பதிய வைக்கலாம். மனித மூளையின் ஒரு மாதிரி தான், செயற்கை நுண்ணறிவு ஆகும்.
நமது மூளையின் முழு செயல்பாடுகளையும், ஒரு இயந்திரம் எளிதாக கற்று கொள்கிறது.
கை கால்களை இயக்க முடியாத மாற்றுத்திறனாளிகள், தங்கள் கண் இமைகளின் அசைவின் மூலம், ஒரு கம்ப்யூட்டரை இயக்கலாம். நவீன எம்.ஆர்.ஐ., ஸ்கேன், நாம் மனதில் நினைப்பதை எழுத்து வடிவில் கொடுக்கும் திறன் பெற்றுள்ளது.
நமது மூளையில் சிலிக்கான் சிப்ஸ்களை பதிப்பதன் மூலம், சிந்திக்கும் ஆற்றலை கட்டுப்படுத்தவும், அதிகரிக்கவும் செய்ய முடியும்.
மூளையில் முழு திறனையும் பயன்படுத்த, கம்ப்யூட்டர் அறிவு மிகவும் முக்கியம்.
மாணவர்கள் கம்ப்யூட்டரை திறம்பட இயக்க கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

