/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுாரில் புதிய குடியிருப்புகளில் பாதிப்பு ; பழங்குடி மக்களுக்கு நாள்தோறும் சிரமம்

ADDED : ஜூன் 11, 2024 01:41 AM

பந்தலுார்;பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பி.ஆர்.எப்., பழங்குடியினர் கிராமம் அமைந்துள்ளது.
இங்குள்ள பழங்குடியினர் குடியிருப்புகள் இடிந்து விழும் நிலையில் காணப்பட்டதால், கூடலுார் ஊராட்சி ஒன்றிய மூலம் பழங்குடியினருக்கான வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தலா, 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 10 வீடுகள் கட்டித் தரப்பட்டது. இரண்டு ஒப்பந்ததாரர்கள் மூலம் வீடுகள் கட்டப்பட்ட நிலையில், ஒரு ஒப்பந்ததாரர் குடியிருப்புகளை தரமான முறையில் கட்டியுள்ளார்.
மீதமுள்ள குடியிருப்புகள் தரமின்றி கட்டப்பட்டதால், தற்போது பெய்து வரும் மழையின் போது, மேற்கூரைகளில் கசிவு ஏற்பட்டு குடியிருக்க முடியாத நிலையில் பயனாளிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மின் மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதியில் மழைநீர் கசிவால் வீட்டு சுவர்களில் மின்சாரம் பாய்ந்து பாதிப்பு ஏற்படும் அபாய நிலை காணப்படுகிறது.
அத்துடன் குடியிருப்புகளை ஒட்டி கட்டப்பட்டுள்ள கழிப்பிடங்களும் சுவரில் விரிசல் ஏற்பட்டு விழும் நிலையில் உள்ளதால், கழிப்பிடங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. சில கழிப்பிட குழிகள் உடைந்து உட்பகுதிக்கு சென்றுள்ளதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பழங்குடியினர் கூறுகையில், 'இது போல் தரமற்ற முறையில் வீடுகள் கட்டிய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கவும், விரிசலான சுவர்களை சரி செய்து தரவும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் முன் வர வேண்டும்,' என்றனர்.