/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மார்க்கெட் கடைகள் இடித்து கட்டும் விவகாரம்; வியாபாரிகள் மத்தியில் திடீர் குழப்பம்

ADDED : மார் 04, 2025 11:20 PM
குன்னுார்; குன்னுார் நகராட்சியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நகராட்சி பொது நிதியுடன், 41.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, மார்க்கெட் கடைகளை இடித்து பார்க்கிங் வசதியுடன் புதிய கடைகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, உழவர் சந்தை மற்றும் இந்து அறநிலைய துறை இடத்தில், தற்காலிக கடைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வியாபாரிகள் சார்பில், இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்து வேறு திட்டத்திற்கு, நிதியை மாற்றி செயல்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஏப்., இரண்டாம் வாரத்தில், தந்தி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா, இங்கு நடக்க உள்ள நிலையில், கட்டுமான பணியால் பாதிப்பு ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'சட்டசபை தேர்தலை முன்வைத்து, மார்க்கெட் கடைகள் இடிக்க, 2 ஆண்டுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது,' என்ற தகவல் வியாபாரிகள் மத்தியில் பரவியதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கமிஷனர் இளம்பரிதி கூறுகையில், ''இதுவரை ஒத்திவைப்பது என்ற எந்த அறிவிப்பும் வரவில்லை. இது வதந்தியாகும். அரசின் திட்டத்தின்படி பணிகள் நடக்கும்,'' என்றார்.