/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எல்லையில் வீசும் 'கேரளா காற்று' 'இண்டியா' கூட்டணியில் விரிசல்
/
எல்லையில் வீசும் 'கேரளா காற்று' 'இண்டியா' கூட்டணியில் விரிசல்
எல்லையில் வீசும் 'கேரளா காற்று' 'இண்டியா' கூட்டணியில் விரிசல்
எல்லையில் வீசும் 'கேரளா காற்று' 'இண்டியா' கூட்டணியில் விரிசல்
ADDED : ஏப் 06, 2024 08:14 PM
நீலகிரி மாவட்டம், பந்தலுார் கேரளா எல்லையில் இருப்பதால், அங்கு கேரளாவின் 'அரசியல் காற்று' வீசி வருகிறது.
பந்தலுாரில் 'இண்டியா' கூட்டணியின் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு, காங்., நிர்வாகிகளுக்கு முறையான அழைப்பு விடுக்கவில்லை என்ற புகார் எழுந்தது.
இதனால், காங்., கட்சியின் நெல்லியாளம் நகர தலைவர் ஷாஜி தலைமையில் கட்சி நிர்வாகிகள், ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்தனர். மேலும், தி.மு.க., வேட்பாளர் ராஜாவுக்கு ஆதரவாக தனியாக பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஷாஜி கூறுகையில், ''தி.மு.க.,வினர் கூட்டணி கட்சியான காங்., நிர்வாகிகளை மதிப்பதில்லை. ஆலோசனைக் கூட்டம், பிரசாரம் தொடர்பாக எந்த தகவலும் தெரிவிப்பதில்லை. இதனால் காங்., கட்சி இந்த பகுதியில் மட்டும் தனியாக தேர்தல் பணியாற்ற முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.
பந்தலுார் அருகே, கேரளாவில், 'இண்டியா' கூட்டணியில் உள்ள கம்யூ.,- காங்கிரஸ், எதிரெதிர் துருவங்களாக தேர்தலை சந்திக்கின்றன. அதன் எல்லையில் உள்ள இங்கு, 'இண்டியா' கூட்டணிக்குள் விரிசலால், ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

