ADDED : ஜூலை 01, 2024 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்;பந்தலுார் அருகே தியேட்டர் ரோடு பகுதியில் வசிப்பவர் அப்துல் அஜீஸ். இவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இரவு இவரது வீட்டின் அருகே இருந்த கொட்டகைக்கு வந்த சிறுத்தை, கன்று குட்டியை கொன்றது.
உயிரிழந்த கன்று குட்டியை தேவாலா வனத்துறையினர், பந்தலுார் வருவாய் துறையினர் நேரடி ஆய்வு செய்தனர்.
மேலும், கால்நடை டாக்டர் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
மக்கள் கூறுகையில், 'இந்த பகுதியில் தொடர்ச்சியாக வளர்ப்பு கால்நடைகளை சிறுத்தை வேட்டையாடி வரும் நிலையில், கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணித்து, சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்,' என்றனர்.