/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பஜாரில் முகாமிட்ட கால்நடைகள் பிடித்து சென்ற நகராட்சி ஊழியர்கள்
/
பஜாரில் முகாமிட்ட கால்நடைகள் பிடித்து சென்ற நகராட்சி ஊழியர்கள்
பஜாரில் முகாமிட்ட கால்நடைகள் பிடித்து சென்ற நகராட்சி ஊழியர்கள்
பஜாரில் முகாமிட்ட கால்நடைகள் பிடித்து சென்ற நகராட்சி ஊழியர்கள்
ADDED : ஆக 21, 2024 11:29 PM
பந்தலுார் : பந்தலுார் பகுதி சாலையில் உலா வந்த கால்நடைகளை, நகராட்சி நிர்வாகம் பிடித்து சென்றது.
பந்தலுார் பஜாரில் கால்நடைகள் உலா வருவதால், பகல் நேரங்களில் வாகனங்கள் சென்று வருவதிலும், பாதசாரிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் நடந்து செல்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது.
மேலும், இரவு நேரங்களில் கடைகள் மற்றும் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் கால்நடைகள், முகாமிடுவதால், கழிவுகள் நிறைந்து வியாபாரிகளும் பாதிக்கப்படுகின்றனர். மக்களின் புகாரை தொடர்ந்து, கடந்த சில நாட்களாக சாலைகளில் திரியும் கால்நடைகளை, நெல்லியாளம் நகராட்சி நிர்வாக ஊழியர்கள் பிடித்து சென்று அபராதம் விதித்து வருகின்றனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,'இதை தொடர்ந்து கால்நடைகளை சாலையில் விட்டால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.