/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடிநீருக்கு திண்டாட்டம் கார் கழுவ தண்ணீர் தாராளம்
/
குடிநீருக்கு திண்டாட்டம் கார் கழுவ தண்ணீர் தாராளம்
குடிநீருக்கு திண்டாட்டம் கார் கழுவ தண்ணீர் தாராளம்
குடிநீருக்கு திண்டாட்டம் கார் கழுவ தண்ணீர் தாராளம்
ADDED : ஏப் 02, 2024 11:24 PM

பந்தலுார்:பந்தலுார் நெல்லியாளம் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், அதிகாரிகளின் கார் கழுவ குடிநீரை பயன்படுத்தி வருவது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பந்தலுார் நெல்லியாளம் நகராட்சியில், குடிநீர் கிணறுகள் வற்ற துவங்கி உள்ளதால் குடிநீர் பற்றாக்குறையில் மக்கள் தவித்து வருகின்றனர்.
இதனால், தற்போது நகராட்சி முழுவதும் மூன்று குடிநீர் லாரிகளில் நாள்தோறும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், நகராட்சி அலுவலக பயன்பாட்டிற்கு லாரியில் தண்ணீர் கொண்டு வந்து டாங்கில் நிரப்பப்படுகிறது. நகராட்சி முழுவதும் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காத நிலையில், நகராட்சி அதிகாரிகள் கார்களை கழுவுவதற்கு குடிநீரை பயன்படுத்தி வருவது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ள நிலையில், குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வரும் சூழலில் நகராட்சி அலுவலகத்தில், பல ஆயிரம் லிட்டர் தண்ணீரை செலவு செய்து கார்களை கழுவுவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

