/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆபத்தான நிலையில் ஆற்றை கடக்கும் நிா்பந்தம்: பருவமழை தீவிரமாவதற்குள் மாற்று ஏற்பாடு அவசியம்
/
ஆபத்தான நிலையில் ஆற்றை கடக்கும் நிா்பந்தம்: பருவமழை தீவிரமாவதற்குள் மாற்று ஏற்பாடு அவசியம்
ஆபத்தான நிலையில் ஆற்றை கடக்கும் நிா்பந்தம்: பருவமழை தீவிரமாவதற்குள் மாற்று ஏற்பாடு அவசியம்
ஆபத்தான நிலையில் ஆற்றை கடக்கும் நிா்பந்தம்: பருவமழை தீவிரமாவதற்குள் மாற்று ஏற்பாடு அவசியம்
ADDED : மே 31, 2024 12:59 AM

பந்தலுார்:பந்தலுார் அருகே பாலாவயல் பாலம் பாதிக்கப்பட்டதால், மக்கள் ஆபத்தான நிலையில் ஆற்றை கடந்து வருகின்றனர்.
பந்தலுார் அருகே சேரங்கோடு மற்றும் நெலக்கோட்டை ஊராட்சிகளை இணைக்கும் பகுதியாக பாலா வயல் ஆறு உள்ளது. இந்த வழியாக கொளப்பள்ளி, அம்மன்காவு, மாங்கம்வயல், கல்பரா, பாட்டவயல், பிதர்காடு, வெள்ளேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது.
ஆற்றை கடப்பதற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பாலம், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பெய்த மழையில் சேதமடைந்து விட்டது. இதனால், கனரக வாகனங்கள் இந்த வழியாக செல்ல முடியாத நிலையில் புதிய பாலம் கட்டித்தர வலியுறுத்தப்பட்டது.
தற்போது, கூடலுார் ஊராட்சி ஒன்றியம் சார்பில், 3 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதனால், மக்கள் ஆற்றை கடக்கவும், வாகனங்கள் சென்று வரவும் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலம் மழையில் அடித்த செல்லப்பட்டது.
இதனால், தற்போது மக்கள் மற்றும் வாகனங்கள் ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இன்னும் சில நாட்களில் தென்மேற்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், இந்தப் பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் ஆற்றை கடக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.
தற்போது ஆற்றை கடப்பதற்கு சிறிய பலகை மட்டுமே போடப்பட்டுள்ள நிலையில் பாதுசாரிகள் மட்டும் ஆபத்தான நிலையில் ஆற்றை கடந்து சென்று வருகின்றனர்.
'மழை காலத்தில் ஆற்றை கடப்பதற்கு தற்காலிக பாலம் அமைத்து தர வேண்டும்,' என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வருவாய் துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்து, 'உடனடியாக தற்காலிக பாலம் அமைத்து தர வேண்டும்,' என, பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தி உள்ளனர்.
எனவே, தற்காலிக பாலம் அமைத்து தர ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.