/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு மூன்று நாட்கள் நடத்த திட்டம்
/
நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு மூன்று நாட்கள் நடத்த திட்டம்
நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு மூன்று நாட்கள் நடத்த திட்டம்
நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு மூன்று நாட்கள் நடத்த திட்டம்
ADDED : ஏப் 29, 2024 01:28 AM

கூடலுார்;நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு பணிகள் இன்று துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.
மாநில விலங்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள, நீலகிரி வரையாடுகள் தற்போது, முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட முக்கூர்த்தி தேசிய பூங்கா, ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கணிசமாக உள்ளன.
இந்நிலையில், இதன் வாழ்விடங்கள் சுருங்கி அழிவின் விளிம்பில் உள்ளது. இதனை பாதுகாக்க, மாநில அரசு நீலகிரி வரையாடுகள் பாதுகாப்பு திட்டத்தை, 2022 முதல் செயல்படுத்தி உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் நீலகிரி, முதுமலை புலிகள் காப்பகம் முக்கூர்த்தி தேசிய பூங்கா உள்ளிட்ட, 13 இடங்களில் வரையாடுகள் கணக்கெடுப்பு பணிகள் இன்று துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது.
மாவட்டத்தில், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட முக்கூர்த்தி தேசிய பூங்காவில், 5 பிரிவுகள்; அதனை ஒட்டிய கூடலுார் ஓவேலி வனச்சரகத்தில் இரண்டு பிரிவுகள்; நீலகிரி வனக்கோட்டத்தில் நடுவட்டம் குந்தா கோரகுந்தா பகுதிகளில் ஆறு பிரிவுகளில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதில், வன உரியின ஆராய்ச்சியாளர்கள், வன ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர்.

