/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வணிகர் சங்க மாநில நிர்வாகி வீடு 29 மணி நேரம் நடந்த ஐ.டி., ரெய்டு ஆவணங்களை அள்ளி சென்ற அதிகாரிகள்

ADDED : ஏப் 12, 2024 01:34 AM

கூடலுார்:கூடலுார் அருகே, வணிகர் சங்க மாநில துணைத் தலைவர் வீட்டில், 29 மணி நேரம் நடந்த ஐ.டி., ரெய்டில், நிலம் வியாபாரம் தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.
நீலகிரி மாவட்டம், கூடலுார் கம்மாத்தி பகுதியை சேர்ந்தவர் தாமஸ், 62. முன்னாள் ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவரான இவர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத் தலைவராகவும் உள்ளார். விவசாயம், வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார்.
காம்மாத்தி பகுதியில் உள்ள இவர் வீட்டுக்கு நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு இரண்டு வாகனங்களில் வந்த, 8 வருமான வரித்துறை அதிகாரிகள், சோதனையை துவங்கினர். இரவு சில மணி நேர இடைவெளிக்கு பின், நேற்று காலை முதல் மீண்டும், அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டனர்.
மொத்தம், 29 மணி நேரம் சோதனை நடந்தது. தொடர்ந்து, மாலை, 4:00 மணிக்கு சோதனை நிறைவு பெற்றது.
அதில், கைப்பற்றப்பட்ட நிலங்கள் மற்றும் வியாபாரம் தொடர்பான ஆவணங்களை, வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.
தாமஸ் கூறுகையில், ''தன்னிடமிருந்து நிலம், கடை தொடர்பான ஆவணங்களை மட்டுமே, அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்,'' என்றார்.