/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மின் கம்பத்தை அகற்றாமல் ரோடு போட்ட ஊராட்சி நிர்வாகம்
/
மின் கம்பத்தை அகற்றாமல் ரோடு போட்ட ஊராட்சி நிர்வாகம்
மின் கம்பத்தை அகற்றாமல் ரோடு போட்ட ஊராட்சி நிர்வாகம்
மின் கம்பத்தை அகற்றாமல் ரோடு போட்ட ஊராட்சி நிர்வாகம்
ADDED : மே 01, 2024 11:19 PM

சூலூர் : குமாரபாளையம் ஊராட்சியில் மின் கம்பத்தை அகற்றாமல் கான்கிரீட் ரோடு போடப்பட்டது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.
சுல்தான்பேட்டை ஒன்றியம், குமாரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது செஞ்சேரி கிராமம். இங்குள்ள வீதிகள் சிமென்ட் ரோடுகளாக மாற்றப்பட்டு வருகின்றன. ஒரு வீதியில் ரோட்டின் நடுவே மின் கம்பம் இருக்கிறது. அந்த கம்பத்தை இடம் மாற்றி அமைத்து விட்டு ரோடு போட அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர். மின் வாரியத்துக்கும் தகவல் அளித்தனர். இரு துறையினரும் மக்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. மின் கம்பம் அகற்றப்படாமலேயே ஊராட்சி நிர்வாகம் ரோடு போட்டு முடித்துள்ளது. இது பொது மக்களிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ரோடு போடும் பணி துவங்கும் முன்னரே, ரோட்டின் நடுவில் உள்ள மின் கம்பத்தை வேறு இடத்துக்கு மாற்ற கோரினோம். அதை கண்டு கொள்ளாமல் அப்படியே ரோடு போட்டுள்ளனர். வீதிக்குள் அவசர தேவைக்கு கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக மின் கம்பத்தை அகற்றி வேறு இடத்தில் அமைக்க இரு துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

