/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆற்றில் தவறி விழுந்தவர் போராடி உயிர் தப்பினார்
/
ஆற்றில் தவறி விழுந்தவர் போராடி உயிர் தப்பினார்
ADDED : ஆக 10, 2024 01:46 AM

கூடலுார்;கூடலுார் அருகே, ஆற்றில் தவறி விழுந்த, ஓட்டுனர் போராடி உயிர் தப்பினார்.
கூடலுார் நந்தட்டியை சேர்ந்தவர் சங்கர், 40. இவர், நேற்று, 2:00 மணிக்கு கூடலுாரிலிருந்து, டிப்பர் லாரியில் ஏறி நாடுகாணி நோக்கி சென்றார். இரும்புபாலம் அருகே, லாரியை நிறுத்திய ஓட்டுனர் ராஜனும், சங்கரும் டீ குடித்தனர். அப்போது, சங்கர் பாண்டியார் டான்டீ சாலை வழியாக நடந்து சென்றவர் திரும்பவில்லை.
சந்தேகமடைந்த ஓட்டுனர் ராஜன், டீ கடைக்காரர் குமார் ஆகியோர் அப்பகுதிக்கு சென்றபோது, சங்கர் தவறி பாண்டியார் புன்னம்புழா ஆற்றில் விழுந்தது தெரிய வந்தது. அவர் தேடியும் கிடைக்கவில்லை.
தகவல் அறிந்த, கூடலுார் டி.எஸ்.பி., வசந்தகுமார், தாசில்தார் கிருஷ்ண மூர்த்தி, வருவாய் ஆய்வாளர் ராம்குமார், எஸ்.ஐ., கபில்தேவ், தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின் தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஆற்றில் விழுந்து மாயமான சங்கர், ஒரு மணி நேரத்துக்கு பின் தண்ணீரில் தத்தளித்து, தலையில் காயத்துடன் தானாக கரைக்கு வந்து சேர்ந்தார். போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக கூடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆற்றில் விழுந்தவர் உயிருடன் வந்ததால் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.