/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஏலத்தில் தேயிலை விலை 'கிடுகிடு' உயர்வு! விவசாயிகளுக்கு பயன் ஏற்பட வாய்ப்பு
/
ஏலத்தில் தேயிலை விலை 'கிடுகிடு' உயர்வு! விவசாயிகளுக்கு பயன் ஏற்பட வாய்ப்பு
ஏலத்தில் தேயிலை விலை 'கிடுகிடு' உயர்வு! விவசாயிகளுக்கு பயன் ஏற்பட வாய்ப்பு
ஏலத்தில் தேயிலை விலை 'கிடுகிடு' உயர்வு! விவசாயிகளுக்கு பயன் ஏற்பட வாய்ப்பு
ADDED : செப் 10, 2024 02:52 AM
குன்னுார்:குன்னுார் தேயிலை ஏலத்தில் சராசரி விலை உயர்ந்துள்ளது.
குன்னுார் ஏல மையத்தில், 36வது ஏலம் நடந்தது. இதில், '14.56 லட்சம் இலை ரகம்; 3.43 லட்சம் டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 17.99 லட்சம் கிலோ ஏலத்திற்கு வந்தது.
'13.96 லட்சம் கிலோ இலை ரகம்; 3.30 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 17.26 லட்சம் கிலோ விற்றது. மொத்த வருமானம், 23.58 ரூபாய் கோடி கிடைத்தது. சராசரி விலை கிலோவுக்கு, 136.63 ரூபாய்,' என, இருந்தது.
கொச்சி ஏல மையத்தில், 7.20 லட்சம் கிலோ வரத்து இருந்ததில், 6.75 லட்சம் கிலோ விற்றது. கோவை ஏல மையத்தில், 3.4 லட்சம் கிலோ வரத்து இருந்ததில், 3.08 லட்சம் கிலோ விற்றது. 'டீசர்வ்' ஏலத்தில், 1.79 லட்சம் கிலோ வரத்து இருந்த நிலையில், 1.77 லட்சம் கிலோ விற்றது. மற்ற ஏல மையங்களை விட டீசர்வ் ஏலத்தில் சராசரி விலை மிகவும் குறைவாக இருந்தது.
வட மாநில உற்பத்தி குறைந்ததால், தென் மாநில தேயிலை துாளுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. தென் மாநில ஏல மையங்களில், 93 சதவீத தேயிலை துாள் விற்பனையானதுடன் விலையும் அதிகரித்துள்ளது. சராசரி விலை கிலோவிற்கு, 'கொச்சியில், 168.71 ரூபாய்; கோவையில், 147.04 ரூபாய்; குன்னுாரில், 136.63 ரூபாய்; டீசர்வில், 123.82 ரூபாய்,' என, உயர்ந்தது.
விவசாயிகளுக்கு பயன் நிச்சயம்
கடந்த, 35வது ஏலத்தை ஒப்பிடுகையில், 35 ஆயிரம் கிலோ வரத்தும்; 1.50 லட்சம் விற்பனையும், 2.63 கோடி ரூபாய் மொத்த வருமானமும் அதிகரித்தது. அதே நேரத்தில் சராசரி விலையில் கிலோவுக்கு, 4 ரூபாய் வரை ஏற்றம் கண்டது; கடந்த, 4 வாரங்களாக சராசரி விலை 'கிடுகிடு' வென உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், 2022ம் ஆண்டு நடந்த, 36வது ஏலத்தில், வரத்து, 18.38 லட்சம் இருந்த நிலையில், 14.29 லட்சம் கிலோ விற்பனையாகி, 14.10 கோடி ரூபாய்; 2023ம் ஆண்டு, வரத்து, 22.68 லட்சம் கிலோ இருந்த நிலையில், 19.45 லட்சம் கிலோ விற்பனையாகி, 17.41 கோடி ரூபாய்,' என, மொத்த வருமானம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றத்தால், விவசாயிகளுக்கு அடுத்தமாதம் வழங்கப்படும் பசுந்தேயிலைக்கான விலை உயர வாய்ப்புள்ளது.