/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலை சீரமைக்க களமிறங்கிய பொதுமக்கள்: நகராட்சியை நம்பி பயனில்லை
/
சாலை சீரமைக்க களமிறங்கிய பொதுமக்கள்: நகராட்சியை நம்பி பயனில்லை
சாலை சீரமைக்க களமிறங்கிய பொதுமக்கள்: நகராட்சியை நம்பி பயனில்லை
சாலை சீரமைக்க களமிறங்கிய பொதுமக்கள்: நகராட்சியை நம்பி பயனில்லை
ADDED : மே 12, 2024 11:49 PM

பந்தலுார்:நெல்லியாளம் நகராட்சியின், 18வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கூவமூலா கிராமம் அமைந்துள்ளது.
இங்கு பழங்குடியினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதி கிராமங்களுக்கு செல்ல சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய், தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகள் இல்லாத நிலையில் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனால், நடந்து முடிந்த தேர்தலை புறக்கணிப்பு செய்ய பொதுமக்கள் முடிவு செய்து கருப்பு கொடிகள் கட்டி பேனர் வைத்தனர். அங்கு சென்ற அதிகாரிகள், 'தேர்தல் முடிந்தவுடன் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும்,' என, உறுதி அளித்ததால், போராட்டத்தை கைவிட்டனர்.
ஆனால், தேர்தல் முடிந்தும் பணிகள் ஏதும் துவங்காத நிலையில் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், கிராமத்தின் ஒரு பகுதிக்கு செல்லும் மேட்டுப்பாங்கான சாலை, முழுமையாக பெயர்ந்து, வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் இருந்தது. இந்த பகுதி மக்களின் அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட, எந்த வாகனங்களும் வராத நிலையில் சிரமப்பட்டு வந்தனர். தொடர்ந்து வார்டு கவுன்சிலர் சாஹினாஜாபினாஸ் தலைமையில், கிராம மக்கள் இணைந்து அங்குள்ள தோட்டங்களில் இருந்த கற்களை சேகரித்து சாலையை சீரமைத்தனர். இதன் மூலம் வாகனங்கள் செல்ல ஏதுவாக அமைந்துள்ளது.
மக்கள் கூறுகையில்,'கிராமங்களில் உள்ள பிற பணிகளையும் கிராம மக்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள உள்ளோம். எங்கள் நிலை குறித்து அரசியல்வாதிகள் யாரும் கண்டுகொள்ளாத நிலையில், வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் அரசியல்வாதிகளுக்கு உரிய பாடம் புகட்டுவோம்,' என்றனர்.