/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வறட்சியினை தாங்கி வளரும் எள் பயிர்களின் அரசி
/
வறட்சியினை தாங்கி வளரும் எள் பயிர்களின் அரசி
ADDED : மே 29, 2024 11:21 PM
மேட்டுப்பாளையம் : வறட்சியினை தாங்கி வளர தன்மையுடையது 'எள்' என கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பெருமாள்சாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
எள் பயிரானது எண்ணெய் வித்து பயிர்களின் அரசி என்றழைக்கப்படுகிறது. இது தொடர் பயிருக்கும், கலப்பு பயிருக்கும் மற்றும் தனிப்பயிருக்கும் ஏற்றதாகும்.
எள் ஒரு வெப்ப மண்ட பயிராக இருப்பதால், நிலத்தடியில் எஞ்சியுள்ள ஈரத்தன்மையை பயன்படுத்தி வறட்சியினை தாங்கி வளர தன்மையுடையதாகும். மேலும் இதனுடைய வேரானது மண் அமைப்பினை மாற்றம் செய்வதனால், நீர் பிடிப்பு தன்மையை அதிகரிக்கிறது. மாசிப் பட்டம், ஆடிப் பட்டம், மார்கழி பட்டத்தில், சாகுபடி செய்யலாம்.
ஒரு எக்டருக்கு 5 கிலோ விதை போதுமானதாகும். ஒரு ஏக்டருக்கு 12.5 கிலோ, வேளாண்மைத்துறை வழங்கும் எண்ணெய் வித்து நுண்ணூட்டக் கலவையினை, செறிவூட்டப்பட்ட தொழு உரமாக இடுவதன் வாயிலாக பெரும்பாலான நுண்ணூட்டச் சத்துக்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யலாம். மண் பரிசோதனை பரிந்துரையின் படி உரமிட வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண் விரிவாக மையங்களையோ அல்லது உழவர் செயலியின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.---