/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உடல் தளர்ந்தாலும் உள்ளம் தளரவில்லை: பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவி
/
உடல் தளர்ந்தாலும் உள்ளம் தளரவில்லை: பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவி
உடல் தளர்ந்தாலும் உள்ளம் தளரவில்லை: பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவி
உடல் தளர்ந்தாலும் உள்ளம் தளரவில்லை: பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவி
ADDED : மே 10, 2024 11:29 PM

பந்தலுார்;பந்தலுார் அருகே எலும்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாணவி, 10 வகுப்பு தேர்வெழுதி வெற்றி பெற்று சாதித்துள்ளார்.
பந்தலுார் அருகே பாட்டவயல் கரும்பன்மூலா பகுதியை சேர்ந்தவர்கள் சைனுதின்-ஜினத் தம்பதி, இவர்களுக்கு, பாத்திமாத்து சுகைனா மற்றும் ஷப்னா ஜாஸ்மின் ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இருவரும் எலும்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்டதால், பெற்றோர்உதவி இல்லாமல் எழுந்து நடமாட கூட முடியாது. இருவரும் பிதர்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர். அதில், பாத்திமாத்து சுகைனா, கடந்த ஆண்டு, பிளஸ்-2-பொது தேர்வில் வெற்றி பெற்றார்.
இவரின் தங்கை ஷப்னா ஜாஸ்மின், ஆசிரியர் உதவியுடன், 10 வகுப்பு பொது தேர்வு எழுதினார். எழுந்து நடமாட முடியாமல் படுத்த படுக்கையாக உள்ள இந்த மாணவியை, பெற்றோர், நண்பர்கள் உதவியுடன் தினசரி ஆம்புலன்சில் கொண்டு வந்து, தேர்வு மையத்தில், தேர்வு எழுத வைத்தனர்.
இதில், ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்கு மாணவி ஜாஸ்மின் பதில் கூற, அதனை ஆசிரியர் பதிவு செய்தார். இந்நிலையில், நேற்று வெளியான, 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவில், மாணவி ஜாஸ்மின், 225 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் மீரா மற்றும் சக ஆசிரியர்கள் வாழ்த்தினார்கள்.
சகோதரி மற்றும் பெற்றோர் ஜாஸ்மினுக்கு கேக் ஊட்டி மகிழ்ச்சியை தெரிவித்தனர். உடல் தளர்ந்த போதும் உள்ளம் தளராமல் பொதுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவி, கிராம மக்களின் பாராட்டையும் பெற்றுள்ளார்.