/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஓட்டளிக்காமல் கிராமத்தில் முடங்கிய பழங்குடிகள் :ஜனநாயக கடமையாற்ற முடியாமல் ஏமாற்றம்
/
ஓட்டளிக்காமல் கிராமத்தில் முடங்கிய பழங்குடிகள் :ஜனநாயக கடமையாற்ற முடியாமல் ஏமாற்றம்
ஓட்டளிக்காமல் கிராமத்தில் முடங்கிய பழங்குடிகள் :ஜனநாயக கடமையாற்ற முடியாமல் ஏமாற்றம்
ஓட்டளிக்காமல் கிராமத்தில் முடங்கிய பழங்குடிகள் :ஜனநாயக கடமையாற்ற முடியாமல் ஏமாற்றம்
ADDED : ஏப் 22, 2024 01:34 AM

பந்தலுார்:பந்தலுார் அருகே கிளன்ராக் பகுதியில், ஜனநாயக கடமையாற்ற முடியாத நிலையில் பழங்குடியின மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
பந்தலுாரில் இருந்து, 10 கி.மீ. தொலைவில் வனத்திற்குள் கிளன்ராக் பழங்குடியினர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கு செல்ல போதிய சாலை வசதி இல்லாததுடன், வாகன வசதிகளும் இல்லாத நிலையில், மக்கள், 10 கி.மீ., துாரம் நடந்தே செல்ல வேண்டிய நிர்பந்தம் உள்ளது.
இப்பகுதியில், யானை, சிறுத்தை, கரடி, ராஜநாகம் உட்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.
தனித்தீவு போல அமைந்துள்ள இந்த கிராமத்தில், 7 குடும்பங்கள் உள்ளன. அவசர தேவைகளுக்கு வெளியில் வர முடியாத நிலையில், வாரத்தில் ஒரு நாள் மட்டும், பந்தலுார் பஜாருக்கு வரும் கிராம மக்கள், தங்களுக்கு தேவையான பொருட்களை, வாங்கி கொண்டு குறிப்பிட்ட ஒரு ஜீப்பில் கிளன்ராக் கிராமத்திற்கு செல்கின்றனர்.
வனத்துறை மற்றும் அதிரடிப்படை போலீசார் மட்டும், எப்போதாவது கிராமத்துக்கு சென்று வருகின்றனர். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் யாரும் கிராமத்தை எட்டி கூட பார்ப்பதில்லை.
அத்துடன் தேர்தல் நேரங்களில் கூட யாரும் இந்த கிராமத்திற்கு செல்லாத நிலையில், வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் பிரசாரங்கள் குறித்து இவர்களுக்கு எதுவும் தெரிவதில்லை.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த தேர்தல் குறித்த தகவல்களும் இவர்களை சென்றடையாத நிலையில், 19ம் தேதி நடந்த தேர்தலின் போது, கிளன்ராக் பகுதி மண்ணின் மைந்தர்கள் யாரும் ஓட்டு பதிவு செய்யவில்லை. இதனை அறிந்த அவர்களுக்கு, தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடியாமல் போனது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
பண்டைய பழங்குடி அமைப்பின் நிர்வாகிகள் கூறுகையில், 'இது போன்ற பகுதிகளில் வாழும் பழங்குடிகளை ஓட்டுச்சாவடிக்கு அழைத்து வர வாகனம் அனுப்பப்படும் என தேர்தல் அதிகாரிகள் கூறினர். ஆனால், இங்கு ஒருவர் கூட வரவில்லை. மாவட்ட தேர்தல் அலுவலர், இது குறித்து விசாரணை செய்து பழங்குடிகளை புறக்கணித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

