/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் சாலையில் அபாய மரங்கள் அகற்றும் பணி தீவிரம்
/
குன்னுார் சாலையில் அபாய மரங்கள் அகற்றும் பணி தீவிரம்
குன்னுார் சாலையில் அபாய மரங்கள் அகற்றும் பணி தீவிரம்
குன்னுார் சாலையில் அபாய மரங்கள் அகற்றும் பணி தீவிரம்
ADDED : ஆக 29, 2024 02:43 AM

கோத்தகிரி : கோத்தகிரி -குன்னுார் சாலையில் அபாய மரங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில், பருவமழையின் போது காற்று வீசும் பட்சத்தில் சாலையோர அபாய மரங்கள் விழுந்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருவது தொடர்கிறது.
மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல் படி, வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் மின்சாரத்துறை உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து, குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு, மாவட்டம் முழுவதும் அபாய மரங்களை கணக்கெடுத்து, மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது.
ஊட்டி-கோத்தகிரி சாலையில் கார்ஸ் வுட் பகுதியில், வானுயர்ந்த அபாயமான கற்பூர மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இதனால், இச்சாலையில் மரங்கள் விழுந்து அசம்பாவிதம் நடப்பதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது.
தற்போது, கோத்தகிரி- குன்னுார் சாலையில், கட்டபெட்டு அருகே, வெஸ்ட் புரூக் பகுதியிலும், அபாய மரங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது. இப்பணி முழுமை பெறும் பட்சத்தில், மழை நாட்களில், அசம்பாவிதம் முழுமையாக தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது.