/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பள்ளி அருகே வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம்
/
பள்ளி அருகே வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம்
ADDED : பிப் 21, 2025 10:43 PM
கோத்தகிரி; கோத்தகிரி பில்லிக்கம்பை சாலையில், பள்ளி அருகே வேகத்தடை இல்லாததால், வேகமாக இயக்கப்படும் வாகனங்களால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
கோத்தகிரி மற்றும் குன்னுாரில் இருந்து, பில்லிக்கம்பை வழியாக, கக்குச்சி பகுதிக்கு அரசு பஸ்கள், பள்ளி வாகனங்கள் உட்பட தனியார் வாகனங்களின் இயக்கம் அதிகமாக உள்ளது.
தேயிலை தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக உள்ளதால், லோடு ஏற்றி செல்லும் கனரக லாரிகளும் இயக்கப்படுகின்றன. இந்த குறிப்பிட்ட சாலை, மிக நேர்த்தியாக சீரமைக்கப்பட்டுள்ளதால், வாகனங்கள் அதி வேகத்தில் இயக்கப்படுகின்றன. சாலையை ஒட்டி, அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆரம்பப்பள்ளி ஆகியவை அமைந்துள்ளன. இப்பள்ளிகளில், நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்றனர்.
தவிர, கிராம நிர்வாக நிர்வாக அலுவலகம், ரேஷன் கடை ஆகியவை அமைந்துள்ளதால், பல்வேறு தேவைகளுக்காக வரும் மக்களின் எண்ணிக்கை இப்பகுதியில் அதிகமாக உள்ளது. இதனால், வேகமாக வரும் வாகனங்களால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. எனவே, அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க, பள்ளிகள் அமைந்துள்ள இடங்களில், நெடுஞ்சாலைத்துறை வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.