/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அங்கன்வாடி மையத்தில் உதவியாளர் இல்லை; மதியத்துடன் வீட்டிற்கு அனுப்பப்படும் குழந்தைகள்

ADDED : மார் 14, 2025 10:25 PM
பந்தலுார்; பந்தலுார் அருகே, கொளப்பள்ளி பகுதி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அதிக அளவில் உள்ள பகுதியாக உள்ளது.
இதனால், இந்த பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை, கொளப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள அங்கன்வாடி மையங்களில் பாதுகாப்பாக விட்டு சென்று வந்தனர்.
இந்நிலையில், இங்கு பணியாற்றி வந்த அங்கன்வாடி உதவியாளர், பதவி உயர்வு பெற்று சென்று விட்ட நிலையில், அங்கன்வாடி ஆசிரியர் மட்டுமே உள்ளார்.
தற்போது, அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு வாரத்தில் பெரும்பாலான நாட்களில் கூட்டம் மற்றும் பல்வேறு ஆய்வு பணிகள் மேற்கொள்ள நிர்பந்திக்கப்படும் நிலையில், அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க முடியாத நிலை உள்ளது.
இதனால், 'கொளப்பள்ளி அங்கன்வாடி மையத்தில் மதியம் ஒரு மணிக்கு மேல், குழந்தைகளை தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்,' என, பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால், கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளை, அங்கன்வாடி மையத்தில் விட்டு செல்ல முடியாத நிலையில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பெற்றோர் கூறுகையில், 'இந்த மையத்தில் உதவியாளர் பணியிடத்தை நியமனம் செய்து, குழந்தைகளை காலை முதல் மாலை வரை பாதுகாப்பாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கீதா கூறுகையில், ''இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.