/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பலா மரத்தை தேடி வரும் யானை; அகற்றினால் அச்சமில்லை
/
பலா மரத்தை தேடி வரும் யானை; அகற்றினால் அச்சமில்லை
ADDED : ஆக 20, 2024 10:04 PM
பந்தலுார் : கொளப்பள்ளி பகுதியில் பலா மரத்தை தேடி வரும் யானையால் ஆபத்து அதிகரித்துள்ளது.
பந்தலுார் அருகே மழவன் சேரம்பாடி சுற்று வட்டார பகுதிகளில், யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அதில், ரெட்டை வங்கி என்ற இடத்தில் ராஜலட்சுமி மற்றும் மூர்த்தி ஆகியோரின் வீடுகளுக்கு பின்பகுதியில் வேறொரு நபருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இங்கே பலாமரம் உள்ள நிலையில், யானைகள் நாள்தோறும் பலா காய்களை பறிப்பதற்காக வருகின்றன.
சில நாட்களுக்கு முன்பு, இரவு பலாமரத்தில் யானை கால் வைத்து ஏறிய நிலையில், ஒரு பலா மரம் அடியோடு பெயர்ந்து கீழ் பகுதியில் இருந்த வீட்டின் மீது விழுந்தது. பெரியபாதிப்பு இல்லை.
எனவே, யானைகளால் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில், பலா மரங்களை அகற்ற வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

