/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விழும் நிலையில் மின் கம்பம் மாற்றினால் பாதிப்பு இல்லை
/
விழும் நிலையில் மின் கம்பம் மாற்றினால் பாதிப்பு இல்லை
விழும் நிலையில் மின் கம்பம் மாற்றினால் பாதிப்பு இல்லை
விழும் நிலையில் மின் கம்பம் மாற்றினால் பாதிப்பு இல்லை
ADDED : ஆக 20, 2024 02:09 AM

பந்தலுார்;'குடியிருப்புகள் அருகே விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
பந்தலுார் அருகே கொளப்பள்ளி பஜார் பகுதியில் அதிகளவில் குடியிருப்புகள் மற்றும் கடைகள் அமைந்துள்ளன. அதில்,மொபைல் போன் டவர் அருகே உள்ள குடியிருப்புகள் மற்றும் கடைகளை ஒட்டி, மின்கம்பம் ஒன்று விழும் நிலையில், ஆபத்தாக அமைந்துள்ளது.
இதன் அடிப்பாகங்கள் பலம் இழந்துள்ள நிலையில், மழை மற்றும் பலத்த காற்று வீசும் போது அடியோடு சரிந்து விழுந்தால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படும்.
இப்பகுதி மக்கள் கூறுகையில், 'ஆபத்தான மின்கம்பத்தின் நிலை குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு, பலமுறை தகவல் தெரிவித்தும் பயனில்லை. ஏதேனும் ஆபத்துகள் ஏற்பட்டால் மின்வாரிய அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்,' என்றனர்.
எனவே, பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படும் முன்னர் மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

