/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தாவரவியல் பூங்கா நுழைவு வாயிலில் கழிவுநீர் ஓடியதால் கடும் அதிருப்தி

ADDED : மே 01, 2024 10:56 PM

ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு தொழிலாளர் தினமான நேற்று கூட்டம் அலைமோதிய நிலையில் நுழைவு வாயில் பகுதியில் கழிவு நீர் ஓடியதால், சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு தொழிலாளர் தினமான நேற்று, 20 ஆயிரத்து 400 சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இந்நிலையில், மாலை 6:00 மணிக்கு பூங்கா அருகே கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, நுழைவுவாயில் பகுதியில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல முடியாமலும், உள்ளே சென்றவர்கள் வெளியே வர முடியாமலும் அவதிப்பட்டனர்.
அப்பகுதியில் பெரும் துர்நாற்றம் வீசி சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள், ஊழியர்கள் ஒரு மணிநேரம் போராடி கழிவு நீர் ஓடுவதை நிறுத்தினர். அதன் பின் சுற்றுலா பயணிகள் சென்றனர். இந்த சம்பவத்தால், பெரும் அதிருப்தி ஏற்பட்டது.