/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வேணுகோபால சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
/
வேணுகோபால சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED : ஆக 31, 2024 02:16 AM

ஊட்டி;ஊட்டி அருகே புதிய அக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ள, ஸ்ரீ வேணுகோபால் சுவாமி கோவிலில், திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது.
ஊட்டி ஸ்ரீ வேணுகோபால் சுவாமி கோவிலில் கடந்த, 27ம் தேதி நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவை, தொடர்ந்து திருவீதி உலா நடந்தது. இரண்டாம் நாளில் உரியடி உற்சவமும், நேற்று முன்தினம் (29ம் தேதி) உற்சவர் வேணுகோபால் சுவாமிக்கு அபிஷேகம் தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, இரவு, 7:00 மணிக்கு கோவில் வளாகத்தில் பட்டு வஸ்திரம் அணிந்து, ராதா ருக்மணி சமேத வேணுகோபால் சுவாமிக்கு, திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது.
இதில், ஊட்டி சுற்று வட்டார பகுதியில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.