/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொண்டியாளம் சாலையில் விரிசல்; துண்டிக்கப்படும் அபாயம்
/
தொண்டியாளம் சாலையில் விரிசல்; துண்டிக்கப்படும் அபாயம்
தொண்டியாளம் சாலையில் விரிசல்; துண்டிக்கப்படும் அபாயம்
தொண்டியாளம் சாலையில் விரிசல்; துண்டிக்கப்படும் அபாயம்
ADDED : ஆக 06, 2024 09:47 PM

பந்தலுார் : பந்தலுார் அருகே தொண்டியாளம் பகுதியில் சாலை துண்டிக்கப்படும் அபாயம் உருவாகி உள்ளது.
பந்தலுாரில் இருந்து தொண்டியாளம், உப்பட்டி வழியாக கேரளா மாநிலம் வயநாடு மற்றும் தேவர்சோலை, கூடலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் தொண்டியாளம் என்ற இடத்தில், சாலையை ஒட்டி நீரோடை பாய்கிறது.
நீரோடையில் மண்ணரிப்பு ஏற்பட்டு, அதனை ஒட்டிய சாலை விரிசல் அடைந்து காணப்படுகிறது.
தொடர்ந்து, மழை பெய்தால் மழைநீர் விரிசலில் புகுந்து, சாலை முழுமையாக துண்டிக்கப்படும் அபாயம் ஏற்படும். இதுகுறித்து, இப்பகுதி மக்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில், அதிகாரிகள் ஆய்வு மட்டும் செய்து சென்றனர்.
எனவே, இந்த சாலை முழுமையாக துண்டிக்கப்படும் முன்னர், சீரமைக்க வேண்டியது அவசியம்.