/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடிநீர் இல்லாத தண்ணீர் பந்தல் ;தாகத்துடன் வருபவர்கள் ஏமாற்றம்
/
குடிநீர் இல்லாத தண்ணீர் பந்தல் ;தாகத்துடன் வருபவர்கள் ஏமாற்றம்
குடிநீர் இல்லாத தண்ணீர் பந்தல் ;தாகத்துடன் வருபவர்கள் ஏமாற்றம்
குடிநீர் இல்லாத தண்ணீர் பந்தல் ;தாகத்துடன் வருபவர்கள் ஏமாற்றம்
ADDED : மே 03, 2024 11:56 PM

பந்தலுார்:பந்தலுார் பஜாரில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நெல்லியாளம் நகராட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
திறக்கப்பட்டு ஒரு வாரம் மட்டுமே தண்ணீர் வைக்கப்பட்டது. பந்தலுார் வந்து செல்லும் மக்கள், தண்ணீர் பந்தலுக்கு சென்று குடிநீரை பயன்படுத்தி வந்தனர். ஒரு சில நாட்கள் மட்டுமே தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது அங்கு குடிநீர் இல்லை. இதனால் தண்ணீர் தாகத்துடன் தண்ணீர் பந்தலை நாடும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
எனவே, நகராட்சி நிர்வாகம் அரசு உத்தரவை முறையாக பின்பற்றி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மக்களுக்கு வழங்கநடவடிக்கை எடுக்க வேண்டும்.