/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாதாள சாக்கடை சுத்தம் செய்ய மூன்று இயந்திரங்கள்
/
பாதாள சாக்கடை சுத்தம் செய்ய மூன்று இயந்திரங்கள்
ADDED : ஏப் 24, 2024 09:55 PM

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் நகராட்சியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால், அதை சுத்தம் செய்ய, 96 லட்சம் ரூபாய் செலவில், 3 இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.
மேட்டுப்பாளையம் நகராட்சியில், 100.07 கோடி ரூபாய் செலவில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகள் ஆகியும், இன்னும் முழு அளவில் திட்டங்கள் செய்து முடிக்கவில்லை. பல இடங்களில் பாதாள சாக்கடை குழாயிலிருந்து, தண்ணீர் வெளியேறி வருகிறது.
இந்நிலையில் பாதாள சாக்கடைகள் பராமரிப்பு பணிக்காக, 15 வது மத்திய நிதி குழு மானியத் திட்டத்தின் கீழ், 64.60 லட்சம் ரூபாய் செலவில் ஒரு செட்டிங் மிஷின், 32 லட்சம் ரூபாய் செலவில், இரண்டு டி- சில்ட்டிங் மிஷின்கள் கொண்ட வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. மொத்தம், 96.60 லட்சம் ரூபாய் செலவில் மூன்று வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால், இந்த வாகனத்தில் உள்ள இயந்திரங்களைக் கொண்டு, உடனடியாக நகராட்சி நிர்வாகம் சரி செய்யும் பணிகளில் ஈடுபடும். இத்தகவலை நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வீன் அறிவித்துள்ளார்.

