/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த 'டிப்ஸ்'; விழிப்புணர்வு ஏற்படுத்தும் தன்னார்வ நிறுவனம்
/
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த 'டிப்ஸ்'; விழிப்புணர்வு ஏற்படுத்தும் தன்னார்வ நிறுவனம்
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த 'டிப்ஸ்'; விழிப்புணர்வு ஏற்படுத்தும் தன்னார்வ நிறுவனம்
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த 'டிப்ஸ்'; விழிப்புணர்வு ஏற்படுத்தும் தன்னார்வ நிறுவனம்
ADDED : மே 01, 2024 11:20 PM
பெ.நா.பாளையம் : தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து பெரியநாயக்கன்பாளையம் தேசிய மனித மேம்பாட்டு மையம், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியது.
சோப்பு போட்டு கை கழுவும் போது முதலில் கைகளை ஈரப்படுத்திக் கொண்டு, சோப்பு போட்டு நன்கு தேய்த்த பின்பு, குழாயை திறந்து கைகளை கழுவ வேண்டும். தண்ணீர் குழாயை திறந்து வைத்துவிட்டு, பின்னர் சோப்பு போட்டு கைகளை கழுவும் போது, தண்ணீர் வீணாகும். இதை தவிர்க்க வேண்டும்.
வாளி, 'மக்' பயன்படுத்தி குளிக்க வேண்டும். அவசிய தேவை என்றால் மட்டுமே ஷவரை பயன்படுத்த வேண்டும். கழிப்பறையில் 'பிளஷிங்' பதிலாக வாளி பயன்படுத்தலாம். இதனால் தண்ணீரை சேமிக்க முடியும். சமையலறையில் காய்கறிகள், பழங்கள் கழுவிய பின், அந்த தண்ணீரை மீண்டும் வேறு உபயோகத்துக்கு பயன்படுத்தலாம். அதை வீணாக்கக்கூடாது. கார் கழுவ வாளி மற்றும் 'மக்' கை பயன்படுத்த வேண்டும். கழுவிய தண்ணீரை செடிகளுக்கு ஊற்றலாம். வாஷிங் மெஷின் மற்றும் பாத்திரம் கழுவும் இயந்திரங்களை 'இகோ' மோடில் வைத்து பயன்படுத்த வேண்டும்.
வாளி தண்ணீரில் துணிகளை துவைப்பதால், துணிகளின் எண்ணிக்கையை பொறுத்து, கணிசமான அளவு தண்ணீரை சேமிக்கலாம். குழாய் தண்ணீரை திறந்து வைத்துக்கொண்டு, முகச்சவரம் செய்யக்கூடாது. தேவையான அளவு தண்ணீரை 'மக்' கில் எடுத்து வைத்து பயன்படுத்த வேண்டும். 'ஏசி' யூனிட்டில் இருந்து வரும் தண்ணீர், பாட்டில், டம்ளர்களில் மிச்சம் வைக்கப்பட்டுள்ள தண்ணீரை சேமித்து, துணிகளை துவைக்க பயன்படுத்தலாம்.
செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் போது, மாலை மற்றும் இரவு நேரங்களில் 'ஸ்பிரேயர்' வாயிலாக தெளித்தல் நல்லது. பகல் நேரத்தில் தண்ணீர் விடுவதால், அவை விரைவிலேயே ஆவியாகி விடுகின்றன. தரையை துடைக்க பக்கெட், மக் பயன்படுத்த வேண்டும். மேல்நிலைத் தண்ணீர் தொட்டியை நிரப்ப தானாக இயங்கும் 'வாட்டர் லெவல் கண்ட்ரோலர்களை' பயன்படுத்த வேண்டும். மேல்நிலை தொட்டியில் இருந்து வழியும் தண்ணீரை பக்கெட்டில் பிடித்துக் கொள்ள வேண்டும்.
நாம் செல்லும் பாதையில் பைப்பில் தண்ணீர் வீணாக போவது தெரிந்தால், உடனடியாக அதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கருத்துக்கள் துண்டு பிரசுரத்தில் அச்சிடப்பட்டிருந்தன.
பெரியநாயக்கன்பாளையம் தேசிய மனித மேம்பாட்டு மைய இயக்குனர் சகாதேவன் தலைமையில், அந்நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், பொது மக்களுக்கு தண்ணீர் சிக்கனம் விழிப்புணர்வு நோட்டீசுகளை வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.

