/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் சிலம்பம் போட்டி :திருப்பூர் அணி வெற்றி
/
ஊட்டியில் சிலம்பம் போட்டி :திருப்பூர் அணி வெற்றி
ADDED : மே 05, 2024 11:42 PM

ஊட்டி;ஊட்டியில் நடந்த சிலம்ப போட்டியில் திருப்பூர் அணி வெற்றி பெற்றது.
ஊட்டி சேரிங்கிராசில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெங்களூரூ ஜே.கே., அகாடமி சார்பில் சிலம்ப போட்டி நடத்தப்பட்டது. போட்டிக்கு, கேரளா, கர்நாடகா, தமிழகத்தை சேர்ந்த, 800 மாணவர்கள் பங்கேற்றனர்.
போட்டியில் திருப்பூர் திருமுருகாற்றுப்படை போர் சிலம்பம் தற்காப்பு கலைகள் பயிற்சி பள்ளியை சேர்ந்த, 10 மாணவிகள் பங்கேற்று வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அணிக்கு இரண்டு வெள்ளிப்பதக்கம், வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளனர்.
வெற்றி பெற்ற அணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஜான் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.